ரமலான் சிந்தனைகள்: தெரிந்து கொள்வோம் தொழுகை நேரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2012 10:07
முஸ்லிம்கள் ஐந்துவேளை தொழுகையை தினமும் கடைபிடிக்கின்றனர். இந்த தொழுகை நேரங்கள் நமக்கு தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
பஜ்ர்: அதிகாலை தொழுகை- சூரியன் உதயமாவதற்கு ஒருமணி நேரம் முன்னதாக தொழுவது. லுஹர்: மதிய தொழுகை- சூரியன் உச்சியில் இருந்து மேற்குநோக்கி சற்று சாய்ந்த பிறகு 5 நிமிடங்கள் கழித்து தொழுவது (உத்தேசமாக மதியம் 12.10 வாக்கில்) அஸர்: பிந்திய மதியம்- சூரியன் உச்சியில் இருந்து மேற்கில் சாய்ந்ததும் அடிக்கும் வெயிலில் ஒரு பொருளின் நீளம், அதன் நீளத்தை விட ஒன்றரை மடங்காக (நிழல்) தெரியும் போது (உத்தேசமாக மாலை 4 மணி) தொழுவது. மஃக்ரிப்: பிந்திய மாலை- சூரியன் மறைந்ததும் சில நிமிடங்களில் தொழுவது (மாலை 6.30 மணியளவில்) இஷா: இரவு- படுப்பதற்கு முன் நிறைவேற்றும் தொழுகை. ரமலான் மாதத்தில் தினமும் இதைப் பழக்கப்படுத்திக் கொண்டால், மற்ற மாதங்களிலும் நிச்சயம் இது தொடரும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26