மதுரை: பொன்மேனி மெயின் ரோட்டில் உள்ள பூமாரியம்மன் கோயில் ஆடி உற்சவ விழா 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் இன்று சிறப்பாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் வைகையாற்றிலிருந்து பால்குடம் மற்றும் அக்னிசட்டி எடுத்து வந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். நாளை அம்மனுக்கு பொங்கல் வைத்து விசேஷ பூஜை நடைபெறுகிறது.