விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் தாங்கல் நாகம்மன் கோவிலில் மூன்றாம் வெள்ளி உற்சவம் நடந்தது. அதனையொட்டி, சுயம்பு நாகம்மனுக்கு 3ம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிேஷக அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தமிழகம், புதுச்சேரி பகுதிகளிலிருந்து குலதெய்வ வழிபாட்டுக்காரர் கள் பொங்கலிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.