ஆடி மாத ராமாயண பாராயணம் வீடுகள் தோறும் பக்தி பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2012 11:07
திற்பரப்பு: ராமாயண பாராயணத்தை ஊக்குவிக்கும் வகையில் கடையாலுமூட்டில் தினம் ஒரு வீட்டில் ராமாயண பாராயணம் நடக்கிறது. ஆடி மாதத்தில் இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் உண்டு. இம்மாதம் ராமாயண மாதம் என்று சிறப்புடையது. குமரி மாவட்டத்தில் ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது ராமாயண பாராயணமும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஆடி மாதம் ஒன்றாம் தேதி முதல் பெரும்பாலான கோயில்களில் ராமாயண பாராயணம் நடக்கிறது. கடையாலுமூடு தர்மசாஸ்தா கோயில் நிர்வாகிகள் ராமாயண பாராயணத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆடி முதல் நாளில் கோயில் வளாகத்தில் குழுவாக ராமாயண பாராயணம் துவங்கி வரும் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீடுகளிலும் மாலை வேளையில் ராமாயண பாராயணம் செய்கின்றனர். ஆடி மாதம் நிறைவு நாளான வரும் 16ம் தேதி கோயிலில் பட்டாபிஷேகத்துடன் பாராயணம் நிறைவடைகிறது. அடி மாத ராமாயண பாராயணம் வீடுகளில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வீடுகளில் ராமாயண பாராயணம் செய்வது துன்பங்களை போக்கி ஐஸ்வர்யம் அள்ளித்தரும் என்பது நம்பிக்கை.