விவசாயி ஒருவரின் தோட்டத்தில் தக்காளி நல்ல விளைச்சல் இருந்திருந்தும், அவர் சோகமாக இருந்தார். ‘‘ஏன் கவலையாக இருக்கிறீர்கள்’’ என ஒருவர் கேட்டதற்கு, ‘‘ தோட்டத்தில் விளையும் சொத்தை தக்காளிகளை பன்றிகளுக்கு உணவாக கொடுப்பேன். இப்போது நான் எப்படி உணவளிப்பேன்’’ என்றார். இதுபோலவே பலரும் மகிழ்ச்சியான தருணங்களை ரசிப்பதில்லை. எப்போதும் சோர்வாகவே இருப்பர். காரணம் கேட்டால் ‘அது சரியில்லை. இது சரியில்லை’ என குறைகள் மட்டுமே காண்பர். இப்படி இருப்பவரது வாழ்வில் கடைசி வரைக்கும் குறைகள் மட்டுமே எட்டிப்பார்க்கும். ஒருவரது மனநிலையை பொறுத்துதான் மகிழ்ச்சி உற்பத்தியாகிறது.