காரைக்கால்: காரைக்கால் திருவேட்டக்குடி மது மாரியம்மன் கோவில் தீமிதிருவிழாவில் ஏரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியில் உள்ள பழைமை வாய்ந்த அருள்மிகு மது மாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் அதிவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அம்பாளுக்கு அபிேஷகம் ஆராதனை நடந்தது.பின்னர் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தது. பின் ஆலயத்தில் முன்பு அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமிதிருவிழாவில் நேர்த்திக் கடனை செலுத்தினர். அப்போது தீமிதிக்கும் சில பக்தர்கள் வேகமாக தீக்குழியில் இறங்கும் போது சிறு காயம் ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா,முன்னாள் எம்.எல்.ஏ.,ஒமலிங்கம், அறங்காவலர் குழுதலைவர் கலியமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.பின்ன வனவேடிக்கை மற்றும் சிவன்-பார்வதி,காளி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.