பதிவு செய்த நாள்
04
மே
2022
09:05
அவிநாசி: அவிநாசி அருகேயுள்ள ராயம்பாளையம் மக்கள், மண் குதிரை சுமந்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதையொட்டி, ராயம்பாளையம் மக்கள், நடுவச்சேரி சாலை, மடத்துப்பாளையம் சாலை, கச்சேரி வீதி, கிழக்கு ரத வீதி, கோவை பிரதான சாலை, மங்கலம் சாலை வழியாக, ஆகாசராயர் கோவிலுக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, மூன்று மண் குதிரைகளை சுமந்து சென்றனர். தாரை தப்பட்டை முழங்க, பட்டாசு வெடி சப்தத்துக்கு மத்தியில், ஊர்வலம் நடந்தது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஊர்வலத்தில் மக்கள் பங்கேற்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் மோர் வழங்கியும், குதிரை சுமந்து வரும் மக்கள் மீது தண்ணீர் ஊற்றியும், வெயிலின் சுடுதலை சமாளிக்க உதவினர். ன், ஆகாசராயர் கோவிலில், குதிரைகளை வரிசையாக நிற்க வைத்து, பூஜை செய்யப்பட்டன. பக்தர்கள், நேர்த்திக்கடனாக, காத்தவராயருக்கு, கிடாய் வெட்டி வழிபட்டனர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.