கோகணேஸ்வரர் கோயிலில் 100 கிலோ மலர்களால் புஷ்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2022 11:05
மயிலாடுதுறை : குத்தாலம் அருகே திருக்குளம்பியம் கோகணேஸ்வரர் கோவிலில் 100 கிலோ வண்ண வாசனை மலர்களைக் கொண்டு புஷ்பாபிஷேகம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கருப்பூர் ஊராட்சி திருக்குளம்பியம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த கோகணேஸ்வரர் சிவாலயம் அமைந்துள்ளது. இங்கு நேற்று அக்ஷய திரிதியை நாளை முன்னிட்டு சுவாமிக்கு 100 கிலோ வண்ண வாசனை மலர்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று புஷ்பாபிஷேகம் நடந்தது.இந்த நிகழ்வில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.மேலும் இந்த கோவில் பித்ரு சாப நிவர்த்தி தலமாகவும் பித்ரு சாபத்திற்கு பரிகாரம் செய்தால் விமோசனம் பெறலாம் என்பது ஐதீகமாக கூறப்படுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.