திருவாடானை: ஓரியூர் சேயுமானார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திருவாடானை அருகே ஓரியூரில் மட்டுவார் குழலியம்மை உடனாய சேயுமானார் கோயில் புதிதாக கட்ட ப்பட்டது. இக் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது. முன்னதாக மே 2ல் முளைப்பாரி ஊர்வலம், திருவிளக்கு பூஜை, விமான கலசம் நிறுவுதல் நடந்தது. நேற்று முன்தினம் 2ம்கால பூஜை, எண் வகை மருந்து சாத்துதல், 3ம்கால பூஜை நடந்தது. நேற்று காலையில் கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் மதுரை ஆதினம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பெங்களூர் காரைக்கால் அம்மையார், ஈரோடு குருநாதர் ஒலியரசு, ஓரியூர் சிவ.மகாலிங்கம், கோவை குமாரலிங்கம், பெங்களூர்மாதா அம்மை யார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நடந்த அன்னதானத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.