கம்பத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2022 12:05
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு விடிய விடிய ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அக்னி சட்டி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். உடலில் 21 அக்னி சட்டிகளுடன் வந்து மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவர் தனது நேர்த்தி கடனை செலுத்தினார்.
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 21 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த ஏப்.20 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேர்த்தி கடன் செலுத்துவது ஏப். 3 மற்றும் 4 ம் தேதிகளில் மேற்கொள்ளப்படும். அதன்படி செவ்வாய் கிழமை காலையில் அக்னி சட்டி நேர்த்தி கடன் செலுத்தவது துவங்கியது. செவ்வாய் மற்றும் நேற்றும் விடிய விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி நேர்த்தி கடனை செலுத்தினார்கள், ஜென்ம சட்டி என்றழைக்கப்படும் நேர்த்தி கடனை கருப்பையா என்ற மாற்றுத்திறனாளி செலுத்தினார்., உடலில் 21 அக்னி சட்டிகளுடன் கோயிலிற்கு வந்து தனது நேர்த்தி கடனை செலுத்தினார். ஏராளமான பக்தர்கள் அவரிடம் ஆசி பெற்றனர், தாத்தா, அப்பா தற்போது தான் 21 அக்னி சட்டி நேர்த்தி கடன் செலுத்துவதாக கூறினார். தொடர்ந்து பொங்கல் வைத்தல், ஆயிரம் கண் பானை, உருண்டு கொடுத்தல் உள்ளிட்ட நேர்ந்தி கடன்கள் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டது. நேற்று இரவு கோயிலிற்கு முன்பு வாசகம் என்ற பக்தர் பூக்குழி இறங்கினார். இந்த நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். தொடர்ந்து திருவிழா மே 11 வரை நடைபெறும்.