வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2022 08:05
சபரிமலை : வைகாசி மாத பூஜையில் பக்தர்களின் தரிசனத்துக்கான முன்பதிவு தொடங்கியது. 15 முதல் 19ம் தேதி வரை தரிசனம் செய்யலாம். வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. 15ம் தேதி அதிகாலை முதல் 19–ம் தேதி இரவு வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் நடத்தலாம். அதற்கான ஆன்லைன் முன்பதிவு https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் நேற்று தொடங்கியது. நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள் இரண்டு தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட நெகட்டீவ் சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.