கச்சைகட்டி மாரியம்மன் கோயில் உற்ஸவ சித்திரை பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2022 08:05
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அடுத்த கச்சைகட்டி பெரியார் நகர் ஆதிதிராவிடர் உறவின்முறை, மாரியம்மன் பரிபாலன அறக்கட்டளைக்கும் பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் உற்ஸவ சித்திரை பெருவிழா நடந்தது. திருவிளக்கு பூஜை, மூங்கில் களை நடுதல், அம்மனுக்கு கரகம் ஜோடித்து, சக்தி கிடா வெட்டியும், சேத்தாண்டி வேஷமிட்டு வழிபட்டனர். பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.நேற்று பிரசாத கரை பிரித்தல், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை கிராம்மக்கள் செய்தனர்.