ஆதிமூலப்பெருமாள் கோயிலில் ராமானுஜர் 1005 வது ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2022 02:05
வடபழனி: வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் இராமானுஜர் 1005 வது ஜெயந்தி விழா நேற்று (5ம் தேதி) சிறப்பாக நடைபெற்றது.
இராமானுஜர் 1005 வது ஜெயந்தி (சாற்றுமறை) விழாவை முன்னிட்டு, காலை 6.45 மணிக்கு உடையவர் மூலவர் திருமஞ்சனம், காலை 7.30 மணிக்கு மங்களாசாசனம் உள்புறப்பாடு, காலை 9 மணிக்கு ஸ்நபன திருமஞ்சனம், திருமண்க்காப்பு, திருப்பாவை சேவை சாற்றுமறை. மாலை 6மணிக்கு விசேஷபுறப்பாடு, திருவாராதனம், தீபாராதனை, திருவாய்மொழி (10ம் பத்து )சேவை, பெருமாள் மரியாதை நடைபெற்றது. தொடர்ந்து தீர்த்த பிரசாத விநியோகம், இரவு கந்தப்பொடி உத்ஸவம், ஏகாந்த சேவை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.