மதுக்கரை: மதுக்கரை அருகே, குரும்பபாளையத்திலுள்ள முத்துமாரியம்மன். மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவ விழா முன்னிட்டு, மஞ்சள் நீராட்டு நடத்தது.
திருக்கல்யாண உற்சவ விழா கடந்த, 27ல் கம்பம் நடுதலுடன் துவங்கியது. தொடர்ந்து பூவோடு போடுதல், கருட கம்பம் நடுதல். சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் அதிகாலை முத்து மாரியம்மன், மாகாளியம்மன் தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மேலும் மாவிளக்கு, உச்சிகால பூஜை, பொங்கல் வைத்தல் நடந்தன. திரளான பக்தர்கள் தெய்வங்களை வழிபட்டு சென்றனர். நேற்று பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு வந்தனர். மாலை அம்மன் திருவீதி உலாவுடன் மஞ்சள் நீராட்டும் நடந்தன. நிறைவு நாளான இன்று காலை, 10:00 மணிக்கு மறுபூஜை, அபிஷேக ஆராதனையுடன் விழா நிறைவடைகிறது.