தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவி சிறுமருதூர் தாணுச்சாவூரணி சந்திப்பில் நாட்டாளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் சித்திரை மாத மது எடுப்பு விழா காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். கரகம், மதுக்குடம் எடுத்தும் பொங்கல் வைத்து வழிபட்டனர். இவ்விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.