பதிவு செய்த நாள்
07
மே
2022
09:05
பிராட்வே, உலக மக்களின் நலன் காக்க, கந்தக்கோட்டம் முருகன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.சென்னை பிராட்வே, கந்தக்கோட்டம் முருகன் கோவிலில், கடந்த 4ம் தேதி துவங்கி, நேற்று வரை மூன்று நாட்கள், உலக மக்களின் நலன் காக்க வேண்டி, சிறப்பு யாகம் நடந்தது.கடந்த 4ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, ஸ்ரீ மகா கணபதி ஹோமம் நடந்தது.அன்று மாலை 6 மணிக்கு, முதற்கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமம் நடந்தது.கடந்த 5ம் தேதி காலை 9 மணிக்கு, 2ம் கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமமும், மாலை 6 மணிக்கு 3ம் கால பூஜை, விசேஷ திரவிய ஹோமமும் நடந்தன.நேற்று காலை 9 மணிக்கு 3ம் கால பூஜை, விசேஷ திரவிய ஹோமமும் நடந்தன. காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு கலச புறப்பாடு, மகா அபிஷேகம், நைவேத்திய தீபாராதனை, உற்சவருக்கு பன்னீர் அபிஷேகமும் நடந்தன.நேற்று இரவு 7 மணிக்கு, ஸ்ரீ முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரம், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்தில் பெரிய மாட வீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.