பதிவு செய்த நாள்
28
ஜூலை
2012
11:07
மோகனூர்: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, மோகனூர் காமாட்சி அம்மன் கோவிலில், வளைகாப்பு விழா நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.மோகனூர், சுப்ரமணியபுரத்தில் காமாட்சி அம்மன், முத்துகுமாரசாமி, சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடி வெள்ளிக்கிழமை வளைகாப்பு விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை 10.30 மணிக்கு, ராகு கால பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஸ்வாமி, சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், துர்க்கை அம்மன் வார வழிபாட்டு மன்றம், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.