அரூர்: அரூர் அடுத்த அம்மாபேட்டை சென்னம்மாள் கோவிலில், ஆடி பெருக்கு விழா இன்று துவங்கிறது.இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படும். விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வழிபாடு செய்வர். இதற்கான மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. லட்சுமண சுவாமிகள், பழனிசாமி அடிகளார், மாவட்ட சார்பு நீதிபதி கிருபாநிதி, எம்.எல்.ஏ., டில்லிபாபு கலந்து கொள்கின்றனர்.