ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளி விழா நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் திரண்டு வந்து அம்மனை தரிசித்தனர். திருவானைக்கோவில் ஜெம்புகேஸ்வரர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று இரண்டாவது ஆடிவெள்ளி விழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை இரண்டு மணிக்கு நடைதிறக்கப்பட்டு ஸ்ரீஅம்மனுக்கு சிறப்பு பூஜையும், அலங்காரமும் சிறப்பாக நடந்தது.அதிகாலை முதல் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் தரிசித்தனர். பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆடி வெள்ளி அம்மனை தரிசித்தால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.