பதிவு செய்த நாள்
30
ஜூலை
2012
10:07
நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. திருமலை கோவிலில், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், பிரதான வாயில் வழியாக கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய தினமும், காலை, 10 மணி, பிற்பகல் 2 மணி, மாலை, 6 மணி, இரவு, 10 மணி என நான்கு நேரங்களில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், காலை 10 மணி, மாலை 3 மணி மற்றும் இரவு, 10 மணி என மூன்று தவணைகள் மட்டும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல், இந்த புதிய நேரம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.