உலக நன்மை வேண்டி அரியமான் கடலில் கூட்டு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2022 10:05
ராமநாதபுரம் : உச்சிப்புளி அருகே அரியமான் கடலில் உலக நன்மை வேண்டியும், இலங்கை மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டியும் ராமநாதபுரம் பிராண சிகிச்சை மையம் சார்பில் காலை 7:00 முதல் 8:00 மணி வரை கடலில் நின்று ஒரு மணி நேரம் கூட்டு பிரார்த்தனையில் பெண்கள் ஈடுபட்டனர்.ராமநாதபுரம் பழைய செக்போஸ்ட் அருகில் பிராண சிகிச்சை மையம் கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு தியானம் மற்றும் பிராண சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளில் விடுபட தினசரி காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை தியானம் நடத்தப்படுகிறது.தற்போது அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்த நாட்டு மக்கள் மீள வேண்டியும், உலக நன்மைக்காகவும் இந்த ஒரு மணி நேர தியானம் மற்றும் கூட்டு பிரார்த்தனை கடலுக்குள் நடந்தது.