பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2022 10:05
சாத்துார்: ஏழாயிரம்பண்ணை ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாயிரம்பண்ணை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம் நேற்று முன்தினம் மே 9 இரவு 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. பட்டர்கள் திருவிழா கொடி ஏற்றினர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மே 16 பொங்கல், கயிறு குத்து விழா நடைபெறுகிறது. மே 18 தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து நாள்தோறும் அம்மன் காமதேனு, ரிஷபம், சிம்மம், சட்பரம், பூப்பல்லாக்கு போன்ற வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.