நான்குநேரி பெருமாள் கோயிலில் தங்கச் சப்பரம் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2022 12:05
நான்குநேரி: நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தங்கச்சப்பர வீதி உலா வைபவம் நடந்தது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சித்திரை உற்சவ திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு வானமாமலை பெருமாள், வரமங்கைதாயார், தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 7ம் திருநாளான நேற்று வானமாமலை மடத்தின் 31வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர்ஆசீர்வாதத்துடன் மாலை தங்கசப்பரத்தில் வானமாமலை பெருமாள், வரமங்கை தாயாருடன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். வரும்12ம் தேதி பெரிய தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.