வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் வடகட்டளையைச் சேர்ந்த தூண்டிக்கார ஸ்வாமி கோவிலில் ஆண்டு விழா சிறப்பு பூஜை வெகுவிமர்சசையாக நடந்தது. இதில், தூண்டிக்கார ஸ்வாமிக்கு அலங்கார ஆராதனையும் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு நடந்த இன்னிசை பட்டிமன்றத்தில் குறும்பட இயக்குனர் அன்பழகன் நடுவராக பொறுப்பு வகித்தார். ஏற்பாட்டை நிர்வாகக்குழு தலைவர் காசலிங்கம், செயலாளர் வீரமுத்து, பொருளாளர் சண்முகவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.