தங்க முத்து மாரியம்மனுக்கு பூவோடு எடுத்து நேரத்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2022 04:05
சூலூர்: ரங்கநாதபுரம் தங்க முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பூவோடு மற்றும் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சூலூர் அடுத்த ரங்கநாதபுரம் கே.என்.கே., நகரில் உள்ள தங்க முத்து மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, சித்திரை திருவிழாவானது, மே 3 ம்தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 7 ம்தேதி கம்பம் நடப்பட்டது. 9 ம்தேதி, விநாயகர் பொங்கல், காப்பு கட்டுதல் மற்றும் பூவோடு வைத்தல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. நேற்று அம்மை அழைத்தல் நடந்தது. இன்றுஅதிகாலை, திருக்கல்யாண உற்சவம் மாவிளக்கு பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு ரங்கநாதபுரம் விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் பூவோடு மற்றும் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து பொங்கல் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.