சுசீந்திரம் தாணுமாலையர் சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2022 04:05
நாகர்கோவில்: இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் சுசீந்திரம் தாணுமாலையர் சுவாமி கோயிலில் நேற்று இரவு தெப்பத்திருவிழா நடைபெற்றது. சித்திரை தெப்பத்திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஒன்பதாம் நாள் விழாவில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பத்தாம் நாள் விழாவான நேற்று இரவு தெப்பத்திருவிழா நடைபெற்றது. கோயிலில் இடது பக்கத்தில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளியதும் பக்தர்கள் தெப்பம் பவனி வர தொடங்கியது. மொத்தம் மூன்று முறை தெப்பம் வலம் வந்தது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்ற இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.