பதிவு செய்த நாள்
12
மே
2022
05:05
பெ.நா.பாளையம்: தெற்குப்பாளையம் காந்திநகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சி காந்திநகரில் முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த, 25ம் தேதி தொடங்கியது. முனி முடுக்குதல், பொரிச்சாட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை விவேகானந்தா நகர் விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மன் திருக்கல்யாணம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் நடந்தது. மாலையில் பக்தர்கள் முருகன் கோயிலில் இருந்து அக்னி கரகம் மற்றும் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலம் வந்து கோயிலை அடைந்தனர். இதில், 2 பக்தர்கள், 10 அடி அலகு குத்தி, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இன்று மாலை மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.நாளை மறுபூஜை, தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.