நாகர்கோவில் : களியக்காவிளை அருகே வெங்கானூர் பவுர்ணமி காவில் எழுத்து தேவியர் கோயில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மலையாளத்தின் 51 எழுத்துக்களையும், தேவியராக உருவப்படுத்தி வெங்கானூர் பவுர்ணமி காவில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் இந்த சிலைகள் செதுக்கப்பட்டது. கோயில் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சூரியகாலடிமனையில் சூரியன் சுப்பிரமணியன், கொட்டியூர் தந்திரி கிருஷ்ணன் நம்பூதிரி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முக்கிய பூஜாரி சங்கரபட்டர், பவுர்ணமிகாவு தந்திரி மித்ரன் நம்பூதிரிபாடு உள்ளிட்ட 51 தந்திரிகள் இதில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து இங்கு மகாகாளி யாகம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 51 சக்தி பீடங்களில்இருந்து ஆச்சாரியர்கள் இதில் பங்கேற்கின்றனர். வரும் 17–ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் காலபைரவ ேஹாமம் மற்றும் முன்னோர்கள் மோட்ச சமர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறும்.