பதிவு செய்த நாள்
12
மே
2022
05:05
உடுமலை : உடுமலை கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஸ்ரீ வாசவி ஜெயந்தி விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, விநாயகர், முருகன், நவக்கிரகங்கள், அம்மனுக்கு, அபிேஷகம் நடைபெற்றது. காலை, 11:00 மணிக்கு, சிறப்பு ேஹாமம் நடந்தது.தொடர்ந்து, தீபாராதனையும், அம்மன் ஜென்ம நட்சத்திர குழுவினரால், சமாராதனையும் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, நடந்த அம்மன் திருவீதி உலாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, அம்மன் ஜென்ம நட்சத்திர குழுவினர் மற்றும் மாதர் சங்கத்தினர் செய்திருந்தனர்.