திண்டிவனம் : திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி, வரும் 21ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவம் நாளை13ம் தேதி காலை 6:15 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜை மற்றும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வரும் 21ம் தேதி காலை 5:30 மணிக்கு நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் ஆய்வாளர் தினேஷ், செயல் அலுவலர் ஸ்ரீகன்யா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.