சட்டநாதபுரம் கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2022 10:05
மயிலாடுதுறை : சீர்காழி அருகே ஸ்ரீகைலாசநாதர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சட்டநாதபுரம் கிராமத்தில் ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத கைலாசநாதர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்கள் அமைந்துள்ளன பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டன 11ஆம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. இதனை அடுத்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கல இசை முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை வேத மந்திரங்கள் ஓத சர்வசாதகம் திருக்கோலக்கா கார்த்தியை சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சுந்தரேசன், ஜெகதீசன் குடும்பத்தினர் மற்றும் கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர்.