பதிவு செய்த நாள்
13
மே
2022
12:05
உடுமலை: பழநிக்கு தீர்த்த காவடி கொண்டு செல்ல, உடுமலை காமாட்சியம்மன் கோவிலில் இருந்து, கொடுமுடிக்கு, பக்தர்கள் நேற்று கிளம்பினர்.உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவில் வழிபாட்டு குழுவினர், பழநிக்கு, பாதயாத்திரையாக தீர்த்த காவடி எடுத்து செல்வது வழக்கம். பழநி தண்டாயுதபாணி சுவாமிக்கு, புண்ணிய தீர்த்தங்களை கொண்டு அபிேஷகம் செய்வார்கள்.இதற்காக, கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்த வர பக்தர்கள் குழுவினர் நேற்று கிளம்பினர். அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வந்து, வரும், 15ம் தேதி, பழநி பாதயாத்திரையை துவக்குகின்றனர். முன்னதாக, குழுவினர், கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.