1,200 ஆண்டு பழமையான கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2022 12:05
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 7:32 மணிக்கு நடந்தது. மே 11ம் தேதி 4 கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. இன்று காலை சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை கோயில் விமானங்களுக்கு எடுத்துச்சென்றனர். மூலஸ்தானம், அம்பாள் சன்னதி, விநாயகர், சுப்பிரமணியர், வைரவர் சன்னதி கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.