கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2022 01:05
ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடந்தது.
துாத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் 108 வைணவ திவ்யதேசங்களில் சிறப்புபெற்ற நவதிருப்பதி திருக்கோயில்களில் ஒன்பதாவது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி பொலிந்துநின்றபிரான் திருவீதி உலா வருதல் நடந்தது. 5 ஆம் திருவிழாவில் சுவாமி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி க்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. இதற்காக அதிகாலை சுவாமி பொலிந்துநின்ற பிரான் திருத்தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் ரத வீதி வழியாக மீண்டும் கோயில் முன் வந்தடைந்தது. சித்திரை தேரோட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் இளைஞர் பிராமணர் சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் அஜீத், உபயதாரர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்தனர்.