மேலூர்: மேலுார், புதுசுக்காம்பட்டி ஜோதி விநாயகர் கோயில், கரையிப்பட்டி குறிஞ்சியுடைய அய்யனார் கோயில், கீழவளவு நயினம்மாள் கோயில்களில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மே 11 யாகசாலை பூஜைகள் துவங்கியது. ஜோதி நகரில் சிவாச்சாரியார் தட்சினாமூர்த்தி மற்றும் சிவாச்சாரியார்கள் கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் மேலுார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.