திருநெல்வேலி: நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் வருஷாபிஷேகவிழா நடந்தது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை கோயில் விமானக் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது. மாலையில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் நெல்லை டவுன், நான்கு ரதவீதிகளில் உலா நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் (கூடுதல் பொ) சிவ. சுந்தரேசன் மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.