குறும்பபட்டியில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2022 04:05
வேடசந்தூர்: குறும்பபட்டியில் தலையில் தேங்காய் உடைக்கும் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வேடசந்தூர் அருகே குறும்பபட்டியில், மாளம்மன் திருக்கோயில் உள்ளது. குரும்பக்கவுண்டர் இன மக்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில், உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. சக்தி அழைத்தல், வாணவேடிக்கையுடன் தொடங்கிய விழாவில், இன்று காலை தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆண், பெண் பக்தர்கள் புனித நீராடி தரையில் அமர்ந்திருக்க கோவில் பூசாரி அருளுடன் ஒவ்வொருவர் தலையிலும் தேங்காயை அடித்து உடைத்து சென்றார். சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.