சென்னை:சிதம்பரம் நடராஜர் கோவிலில், இந்த மாத இறுதிக்குள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம், என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னையில் அவர் கூறியதாவது:சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள, துணைக் கமிஷனர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.ஆய்வு செய்வதை தடுத்தவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோவிலில், கமிஷனருடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.