சபரிமலை நடை இன்று திறப்பு : 19ம் தேதி இரவு வரை பூஜைகள் நடைபெறும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2022 09:05
சபரிமலை : வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கிறது. 19–ம் தேதி இரவு வரை பூஜைகள் நடைபெறும். இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிேஷகம், நெய்யபிேஷகம் .உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். 19–ம் தேதி வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை முதல் ஐந்து நாட்களிலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.