கொடைக்கானல்: கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஸ்ரீசங்கரலிங்க ஈஸ்வரர் ஸ்ரீ கோமதி அம்மன் திருக்கல்யாண நிகழ்வு நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. யாக யாகசாலை பூஜை மற்றும் பட்டர்கள் வேத மந்திரத்துடன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. விழா கமிட்டியார்கள், அறங்காவலர்கள் குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.