காரைக்கால்: காரைக்கால் முத்துமாரி நாகத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காரைக்கால் சிங்காரவேலர் சாலையில் உள்ள முத்துமாரி நாகத்தம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகத்தை செய்வதற்கு அப்பகுதிமக்கள் கோயிலை புனரமைத்து குடமுழுக்கு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் திருப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் காலயாக பூஜை தொடங்கியது.நேற்று இரண்டு கால யாக பூஜைகள் முடிந்து சிவச்சாரியார்கள் முத்துமாரி நாகத்தம்மனுக்கு கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.இதில் புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நாகத்தம்மனை வழிப்பட்டனர்.