பதிவு செய்த நாள்
14
மே
2022
03:05
சாயல்குடி: சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் பழமையும், புரதான சிறப்பையும் பெற்ற கோயிலாக விளங்குகிறது. இங்கு வருடாந்திர உற்ஸவ விழாவை முன்னிட்டு கடந்த மே 6 அன்று காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தர்ம முனிஸ்வரர் புஷ்ப அலங்காரத்துடன் பச்சை பல்லக்கில், வெள்ளி தாமரையில், திரிசூலம், திருப்பாதங்களுடன் வேட்டை மார்க்கமாக குண்டாற்றுக்கு சென்று துஷ்ட நிக்ரஹ சுத்த பரிபாலன பூஜை நடந்தது. அங்கு ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவர்களுடன் மீண்டும் கோயில் சென்றடைந்தனர். இரவில் கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 5 மணியளவில் கோட்டை விநாயகர், பாலமுருகன், கோட்டை கருப்பசாமி, வீரசக்தி ஆகிய பரிவார தெய்வங்களோடு தர்ம முனிஸ்வரர் குண்டாற்றில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. அங்கிருந்து பக்தர்களின் பால்குடம், காவடி, அக்கினிச்சட்டி உள்ளிட்டவர்களுடன் கோயிலை வந்தடைந்தனர். மூலவர் முனீஸ்வரருக்கு 21 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மூன்று நாட்கள் தொடர் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.