வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் வரிசையாக மலை ஏற அனுமதிக்கப்பட்டனர் . மதியம் 12 மணிக்கு மேல் வந்த பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த இரு நாட்களை விட நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் பக்தர்கள் ஆங்காங்கே மர நிழலில் நின்று இளைப்பாறி கோயிலுக்கு சென்றனர்.