கமுதி: கமுதி அருகே மண்டலமாணிக்கம் அரும்பவளநாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் சித்திரை மாதம் பிரதோஷம் சிறப்புபூஜை நடந்தது.நந்திக்கு பால்,சந்தனம், பன்னீர், திரவியப்பொடி, மஞ்சள்,பஞ்சாமிர்தம் உட்பட 21 வகையான அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது.மூலவரான சிவனுக்கு சிறப்புபூஜை, தீபாராதனை நடந்தது.இதேபோன்று கமுதி, முதுகுளத்தூர் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷம் சிறப்புபூஜை நடந்தது.