வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை சக்தி விநாயகர், வேலாங்கருப்பு, தேவி காளியம்மன், வரம் தரும் காளியம்மன் கோயில் சித்திரை உற்ஸவ விழா மே 6 துவங்கியது. மே 13 பழக்கூடைகளை ஊர்வலமாக எடுத்துவந்து சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். நேற்று பக்தர்கள் அலகுகுத்தி, அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கிராமமக்கள் மற்றும் வைகை விளையாட்டு குழு நண்பர்கள் செய்திருந்தனர்.