பதிவு செய்த நாள்
15
மே
2022
02:05
சென்னை: தருமபுரம் ஆதீனம் நடத்தும் பட்டினப் பிரவேசம் இதுவரை வெளியே பரவலாக தெரியாமல் இருந்தது. ஆனால், தமிழக அரசின் நடவடிக்கையால் இப்போது பிரபலமாகி விட்டது. வட மாநிலங்களிலும் இதைப் பற்றி அதிக அளவில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹிந்தி, குஜராத்தி, மராத்தி என பல வட மாநில டிவி சேனல்களில், பட்டினப் பிரவேசம் என்றால் என்ன, தருமபுரம் ஆதீனம் எங்குள்ளது, அதனுடைய பாரம்பரியம் என்ன, என செய்திகளும், விவாதங்களும் நடந்தன.தமிழக அரசு ஏன் மத விவகாரங்களில் தலையிடுகிறது என குறிப்பிட்டு வட மாநில சேனல்களில் நடைபெற்ற பெரிய விவாதத்தைத் தொடர்ந்து, ஆங்கில சேனல்களும் இதை பெரிதாக்கின.அகில இந்திய அளவில் ஒரு தலைவராக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சிக்கும் ஸ்டாலின் ஏன் இப்படி செய்கிறார் என, சிவசேனா உட்பட சில கூட்டணி கட்சிகள், தி.மு.க., - எம்.பி.,க்களிடம் கேட்டு உள்ளன. இந்த செய்திகள் ஸ்டாலினுக்கு எதிராக உள்ளன. வட மாநிலங்களைப் பொறுத்தவரை ஹிந்து மதத்தை யார் எதிர்த்தாலும் அவர்கள் வில்லனாக பார்க்கப்படுவர். அது, பா.ஜ.,விற்கு சாதகமாக இருக்கும் என கூட்டணி கட்சி எம்.பி.,க்கள், தி.மு.க., - எம்.பி.,க்களிடம் சொன்னார்களாம்.