பதிவு செய்த நாள்
31
ஜூலை
2012
11:07
சேலம்: கோட்டை அழகிரிநாதர் கோவிலில், நேற்று புதிதாக பஞ்சமுக வாத்தியம் பொருத்தப்பட்டது. சேலம், கோட்டையில் அமைந்துள்ள அழகிரிநாதர் கோவிலில், பெருமாள் சன்னிதியில், ஏற்கனவே, பஞ்சமுக வாத்தியம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் சன்னிதியில், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில், ஏழு கால பூஜை நடத்தப்பட்டு வருகிறது.பூஜைக்காக, அம்மன் சன்னிதியில், நேற்று புதிதாக பஞ்சமுக வாத்தியம் பொருத்தப்பட்டது. தலா இரண்டு மணி மற்றும் ஜெயகண்டி, ஒரு மத்தளத்துடன் பஞ்சமுக வாத்தியம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 14 லட்சம் ரூபாய் செலவில், கோவிலில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.