வேலூர் : பாலாறு விழிப்புணர்வு ரத யாத்திரை வேலூர் தங்ககோவில் வளாகத்திலிருந்து சக்தியம்மா துவங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம்,வேலூரி அரியூரில் உள்ள தங்கக்கோவில் வளாகத்திலிருந்து அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் பாலாறு மக்கள் இயக்கம் இணைந்து பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு பாதயாத்திரை மற்றும் ரத யாத்திரையை தங்க கோவில் நிறுவனர் சக்தியம்மா துவங்கி வைத்தார்.
பாலாறு அம்மன் சிலையுடன் புறப்படும் இந்த ரதம் நாளை கர்நாடக மாநிலம் பாலாறு உற்பத்தியாகும் நந்தி துர்கத்திலிருந்து பாலாறு தண்ணீரை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து 7 கலசங்களில் பாலாறு தீர்த்தத்தை எடுத்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டு தமிழகத்தில் பாலாறு நுழையும் இடமான புல்லூர் கனகநாச்சியம்மன் ஆலயத்திலிருந்து வரும் 16 ஆம் தேதி இந்த புனித யாத்திரை பாத யாத்திரையாகவும் துவங்குகிறது.
மக்கள் பாலாற்றை மாசுப்படுத்தாமலும் ஆக்கிரமிப்பு செய்யாமல் பாதுகாக்க வேண்டியும் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தவும் பாலாற்றின் பயன் களை மக்களிடம் எடுத்து செல்ல இந்த விழிப்புணர்வு யாத்திரை துவங்கப்பட்டு திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை,காஞ்சிபுரம் செங்கற்பட்டு மாவட்டங்களின் வழியாக சென்று கடலூர் சின்னகுப்பத்தில் பாலாறு வங்கங்ககடலில் கலக்கும் இடத்தில் இந்த பாத யாத்திரை ஜுன் 5 ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது இதில் சன்னியாசிகள் பேரவை மற்றும் பாலாறு இயக்கத்தினர் திரளானோர் கலந்துகொள்ளவுள்ளனர்