காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் வசந்த உற்சவத்தில், நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் 20 நாட்கள் வசந்த உற்சவம், கடந்த 4ம் தேதி துவங்கியது. தினசரி மதியம் முதல் மாலை வரை மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவு கட்டை கூத்து நாடகம் நடைபெற்றது. நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். மாலையில் தீமிதி விழா நடைபெற்றது. இன்று திருவிழா நிறைவு பெற்றது.