‘பொறுமை’ என்ற வார்த்தையை கேட்டவுடன் சிலரது மனதில் அலுப்பு தொற்றிக்கொள்ளும். இந்த அறிகுறிகள் உங்களிடமும் உள்ளதா... அப்படியானால் நீங்கள் பொறுமையில்லாதவர் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி இருந்தால் வெற்றி பெறுவது கடினம். என்னடா.. இப்படி நம்மை தவறாக சொல்கிறார்களே என நினைக்காதீர். வெற்றி உங்கள் வசமாக வேண்டுமானால், முதலில் பொறுமையை வசமாக்குங்கள். வாழ்க்கை பயணத்தில் நீங்கள் எப்போதும் 100 கி.மீ வேகத்தில் செல்ல முடியாது. அவ்வப்போது மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் 10 கி.மீ வேகத்தில் பயணிக்கத்தான் வேண்டும். இப்படி செய்தால் வெற்றி பெறலாம்.